Home Featured உலகம் ப்ளைதுபாய் விபத்து: பலமுறை தரையிறங்கும் முயற்சி தோல்வி! 63 பேர் பலி!

ப்ளைதுபாய் விபத்து: பலமுறை தரையிறங்கும் முயற்சி தோல்வி! 63 பேர் பலி!

859
0
SHARE
Ad

Flydubai crashமாஸ்கோ – ரஷ்யாவில் ரோஸ்டோப் -ஆன் -டான் நகரில், இன்று அதிகாலை காலை 3.50 மணியளவில் (மலேசிய நேரப்படி 8.50 மணியளவில்) மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் தவித்த ப்ளைதுபாய் விமானம், இறுதியாக விபத்திற்குள்ளானதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போயிங் 737-800 இரகத்தைச் சேர்ந்த அந்த விமானம் பல முறை தரையிறங்க முயற்சி செய்தது என்றும், இறுதியாக தரையில் மோதி பல துண்டுகளாக உடைந்து நொறுங்கியது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் அதில் இருந்த 55 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் பலியாகினர். பயணிகளில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

இந்நிலையில், பயணிகளில் மலேசியர்கள் யாரும் இல்லை என்று மலேசிய வெளியுறவுத்துறை இன்று உறுதிப்படுத்தியுள்ளது.