Home Featured நாடு துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்: வணிகப் பிரமுகரின் மெய்க்காப்பாளர் படுகாயம்!

துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்: வணிகப் பிரமுகரின் மெய்க்காப்பாளர் படுகாயம்!

889
0
SHARE
Ad

gun-shotகோலாலம்பூர் – சிப்பாங்கிலுள்ள அனைத்துலக விமான நிலையத்துக்கு அருகில் சார்ட்டர் பீல்ட் டவுன் பகுதியில் உள்ள உணவகங்களுக்கு அருகில் முகமூடி அணிந்த துப்பாக்கிக்காரர்கள் நடத்திய தாக்குதலில், வணிகர் ஒருவரின் தனிப்பட்ட மெய்க்காப்பாளர் கடுமையாகக் காயமடைந்தார்.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கும், 9 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் காரை அந்த 22 வயதான மெய்க்காப்பாளர் தனியாக ஓட்டிச் சென்ற போது அவரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஏழுமுறை சுடப்பட்ட அந்த மெய்க்காப்பாளர் புத்ராஜெயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நிசான் எக்ஸ்-டிரெயில் (Nissan X-Trail) ரக காரில் வந்த துப்பாக்கித் தாக்குதல்காரர்கள் தப்பிச் சென்று விட்டனர். அவர்கள் மெஷின் கன் எனப்படும் தொடர்ச்சியாகச் சுடும் துப்பாக்கியை வைத்திருந்ததாகப் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கித் தாக்குதல் நடந்த நேரத்தில் மெய்க்காப்பாளரின் முதலாளியான வணிகப் பிரமுகர் வேறு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.