Home Featured கலையுலகம் என் அம்மாவிற்கும் பாடல் பாடியவர் பி.சுசீலா – ஜெயலலிதா பெருமிதம்!

என் அம்மாவிற்கும் பாடல் பாடியவர் பி.சுசீலா – ஜெயலலிதா பெருமிதம்!

1292
0
SHARE
Ad

susela-jayaசென்னை – பி. சுசீலா திரைப்படங்களில் தனக்கு மட்டுமின்றி தனது தாயாருக்கும் பின்னணி பாடல்களைப் பாடியவர் என முதல்வர் ஜெயலலிதா பெருமையுடன் தெரிவித்துள்ளார். கின்னஸ் சாதனை படைத்துள்ள பிரபல பின்னணி பாடகி பி. சுசீலாவை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா, அவருக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, தாங்கள் மிக அதிகமான பாடல்களைப் பாடியதற்கென கின்னஸ் சாதனை படைத்துள்ளீர்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இந்த சாதனைக்கு எனது பாராட்டுதல்களை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

தாங்கள் சிறிய வயதிலிருந்தே இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டு, தங்களது கடின உழைப்பால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளீர்கள்.

#TamilSchoolmychoice

திரைப்படங்களில் எனக்கு மட்டுமின்றி எனது தாயாருக்கும் தாங்கள் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளீர்கள் என்பதை இந்த நேரத்தில் பெருமையுடன் நான் நினைவு கூருகிறேன். பல திரைப்படங்கள் தங்களின் இனிய குரல் வளத்தினாலேயே பெருமை அடைந்தன என்றால் அது மிகையில்லை.

17,695 திரைப்பட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனையாளராக புகழ் பெற்றுள்ள தாங்கள், இன்னும் பல ஆயிரம் பாடல்களைப் பாடி தமிழ் இசைக்கும், இசைத் துறைக்கும் சேவையாற்ற வேண்டுமென நான் இறைவனை வேண்டுகிறேன் என்று ஜெயலலிதா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.