Home Featured தமிழ் நாடு துணை முதல்வர் பதவி மீது எனக்கு ஆசையில்லை – வைகோ!

துணை முதல்வர் பதவி மீது எனக்கு ஆசையில்லை – வைகோ!

573
0
SHARE
Ad

vaiko_says_002விருதுநகர் – துணை முதல்வர் பதவி மீது தமக்கு துளிகூட விருப்பமோ, ஆசையோ இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் சுதிஷ் கலந்துகொண்டு பேசுகையில், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்று அமைக்கப்படும் அமைச்சரவையில் வைகோவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தே.மு.தி.க-மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய வைகோ, கூட்டணி ஆட்சியில் எனக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று சகோதரர் சுதீஷ் சொன்னார்.

#TamilSchoolmychoice

சுதீஷ் எல்லை மீறிய உணர்ச்சிவயப்பட்டு அப்படி பேசிவிட்டார். தமக்கு பதவியின் மேல் கற்பனையில் கூட விருப்பமில்லை என்றும் வைகோ கூறினார். விஜயகாந்த் முதலமைச்சர் ஆனபிறகு கூட்டணிக் கட்சிகள் எல்லாம் அமைச்சரவையில் இடம்பெறும்.

எந்தெந்த இலாக்காக்கள் என்பது அவர் முடிவு செய்யவேண்டியது. துணை முதலைமைச்சர் என்ற பொறுப்போ அல்லது அவையில் அமைச்சர் என்ற பொறுப்போ என் கற்பனையில் கூட இடம்பெற முடியாது. வைகோ சொன்னால் சொன்னதுதான். யாரும் மாற்றமுடியாது என்று உறுதியாக கூறினார் வைகோ.