Home Featured உலகம் எகிப்துஏர் விபத்து: தீவிரவாதச் சதி காரணமாக இருக்கலாம் – அதிகாரிகள் தகவல்!

எகிப்துஏர் விபத்து: தீவிரவாதச் சதி காரணமாக இருக்கலாம் – அதிகாரிகள் தகவல்!

810
0
SHARE
Ad

EgyptAir-planeகெய்ரோ – 66 பேருடன் பாரீசிலிருந்து கெய்ரோ நோக்கிச் சென்ற எகிப்துஏர் விமானம் 804, ரேடார் தொடர்பிலிருந்து விடுபட்டு, மெடிடெரானியன் கடலில் விழுந்து நொறுங்கியதற்கு தீவிரவாதச் செயல்கள் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இது வரைப் பெறப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் சிஎன்என் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,

1.கிரீக் வான் பரப்பை அவ்விமானம் அடைந்த போது கிரீக் விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதனைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் அதிலிருந்து எந்தவித பதிலும் இல்லை.

#TamilSchoolmychoice

2. கெய்ரோ வான்பரப்பை அவ்விமானம் அடைந்த போது, 37,000 அடி உயரத்தில், அவ்விமானம் மிக வேகமானத் திருப்பத்தை அடைந்து பின்பு அவ்வளவு உயரத்தில் இருந்து கடலில் விழுந்துள்ளது.

3. விமானம் மாயமாகி 2 மணி நேரத்திற்குப் பின்னர், அபாய சமிக்ஞை ஒன்று கிடைத்துள்ளது. ஆனால் அது வேறொரு கப்பலில் இருந்து என்று கூறப்படுகின்றது.

4. விமானம் மாயமாகக் காரணம், தொழில்நுட்பக் கோளாறாக இருக்க முடியாது என்றும், தீவிரவாதச் செயலாக இருக்கும் என்றும் எகிப்து உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மெடிடெரானியன் கடலில் எகிப்து விமானத்தின் பாகம் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ‘தி கார்டியன்’ இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது.