Home Featured உலகம் எகிப்து ஏர் விபத்து: பயணிகளின் சடலங்கள் மீட்பு!

எகிப்து ஏர் விபத்து: பயணிகளின் சடலங்கள் மீட்பு!

609
0
SHARE
Ad

EgyptAir-planeகெய்ரோ – மெடிடெரானியன் கடலில் எகிப்து விமானம் எம்எஸ்804 நொறுங்கி விழுந்த இடத்தில் இருந்து பல மனிதச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக விசாரணைக்குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த மே 19-ம் தேதி பாரிசில் இருந்து கெய்ரோ நோக்கிச் சென்ற போது அவ்விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது.

மீட்கப்பட்டுள்ள கறுப்புப் பெட்டியின் மூலம் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதற்கான காரணம் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

அவ்விமானத்தில் மொத்தம் 66 பயணிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.