Home Featured நாடு டாக்கா தாக்குதல்: தீவிரவாதிகளில் ஒருவர் மலேசியாவில் படித்தவர்!

டாக்கா தாக்குதல்: தீவிரவாதிகளில் ஒருவர் மலேசியாவில் படித்தவர்!

938
0
SHARE
Ad

dhaka3கோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமை வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள உணவகத்தில் தாக்குதல் நடத்திய 7 தீவிரவாதிகளில் ஒருவர் மலேசியாவிலுள்ள மோனாஸ் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

நிர்பிராஸ் இஸ்லாம் என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்நபர், வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதோடு, மலேசியாவில் மேற்படிப்பை மேற்கொண்டிருந்திருக்கிறார்.

இந்தத் தகவலை அவரது பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெற்றதாக முக்கிய ஊடகங்கள் பல தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

 

எனினும், அந்நபர் மலேசியாவில் தான் படித்தாரா என்பதை மலேசிய தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு விசாரணை செய்து வருகின்றது.