சவுதி அரேபியா – அண்மையில் தாக்காவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில், தாக்குதல் நடத்தியவர்களில் இரண்டு சர்ச்சைக்குரிய இஸ்லாம் மதபோதகர் ஜாகிர் நாயிக்கின் உரையால் ஈர்க்கப்பட்டு தாக்குதலில் இறங்கியதாக வங்காளதேசம் தெரிவித்திருந்தது.
சர்ச்சைக்குள்ளான இந்த விவகாரம் குறித்து ஜாகிர் நாயிக் இன்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
“எனக்குத் தெரிந்து எந்த ஒரு தீவிரவாதியையும் நான் சந்தித்ததில்லை” என ஜாகிர் நாயிக் இன்று ஸ்கைப் மூலமாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் மதினாவிற்கு சென்றுள்ள அவர், அங்கிருந்த படி, செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசுகையில், “எனக்குத் தெரிந்து நான் எந்த ஒரு தீவிரவாதியையும் சந்திக்கவில்லை. ஆனால் எனக்கு அருகில் யாராவது நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டால் நான் புன்னகைப்பேன். ஆனால் அவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது. ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மக்களைச் சந்திக்கிறேன்” என்று ஜாகிர் நாயிக் தெரிவித்துள்ளார்.