Home Featured தமிழ் நாடு தேவாங்கு போல் இருப்பதாகத் திட்டினார் சுவாதி – ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம்!

தேவாங்கு போல் இருப்பதாகத் திட்டினார் சுவாதி – ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம்!

721
0
SHARE
Ad

Ramkumar-chennai-swathi-murdererசென்னை – இன்போசிஸ் பெண் பொறியியலாளர் சுவாதியைக் கொலை செய்ததாக நம்பப்படும் ராம்குமார், தற்போது உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காவல்துறையின் விசாரணையில் சுவாதியைக் கொலை செய்ததன் காரணம் என்னவென்று ராம்குமார் கூறியிருப்பதாவது:-

“நான் ஆலங்குளம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்தேன். படிக்கும்போதே பேஸ்புக் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்தனர். அப்படி தான் சுவாதியும் எனக்கு அறிமுகம் ஆனார்.”

#TamilSchoolmychoice

“பின்னர் வாட்ஸ்அப் மூலம் அவருடன் தொடர்பு கொண்டேன். அடிக்கடி அவருக்கு வாட்ஸ்அப் மூலம் செய்திகள் அனுப்புவேன். அவரும் பதில் அனுப்புவார். இதைத் தொடர்ந்து அவரை பார்க்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னைக்கு சென்றேன். ஆனால், வேலைக்குச் செல்வதாக எனது வீட்டில் கூறியிருந்தேன்.”

“சென்னை சூளைமேடு பகுதியில் சுவாதியின் வீடு அருகே மேன்ஷனில் தங்கினேன். சில மாதமாக சுவாதியை பின்தொடர்ந்தேன். அங்கு உள்ள பெருமாள் கோயிலுக்கு சாமி கும்பிட சுவாதி வருவார். நானும் அங்கு செல்வேன். சுவாதி வேலைக்கு செல்வதை நோட்டமிட்டு அவரை பின்தொடர்ந்து சென்று என்னை அறிமுகம் செய்துகொண்டேன்.”

தேவாங்கு போல் இருப்பதாகத் திட்டினார் 

“பேஸ்புக் நண்பர் என்பதால் சுவாதியும் என்னிடம் நட்பாக பழகினார். கடந்த நவம்பர் மாதம் நான் அவரை காதலிப்பதாக தெரிவித்தேன். அப்போது அவர் கோபமடைந்து திட்டினார். தொடர்ந்து நான் அவரை காதலிக்குமாறு தொடர்ந்து கூறியதால், தனியாகச் செல்லாமல் தன் தந்தையை துணைக்கு அழைத்துக்கொண்டு இரயில் நிலையத்துக்கு சென்று வந்தார்.”

“நான் பலமுறை இரயில் நிலையத்தில் காத்திருந்து அவரிடம் பேசினேன். அப்போது ஒருமுறை, நான் தேவாங்குபோல் இருப்பதாகக் கூறி, என்னிடம் இனி பேசாதே என்று கூறிவிட்டார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.”

“அதன் பின்பு எத்தனையோ முறை காதலிக்கும் படி கெஞ்சியும் கூட, அவர் என்னை உதாசீனப்படுத்தினார். அதனால் தான் கொலை செய்தேன்”

இவ்வாறு ராம்குமார் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.