Home Featured உலகம் எகிப்து ஏர் விபத்து: விமானி அறையின் உரையாடல் பதிவு கண்டெடுக்கப்பட்டது!

எகிப்து ஏர் விபத்து: விமானி அறையின் உரையாடல் பதிவு கண்டெடுக்கப்பட்டது!

765
0
SHARE
Ad

EgyptAir-planeகெய்ரோ – கடலில் விழுந்து விபத்துக்குள்ளான எகிப்து ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டியைத் தேடும் முயற்சியில் விமானி அறையில் பதிவு செய்யப்பட்ட உரையாடல் கொண்ட கருவியை மீட்புப் படையினர் கண்டெடுத்துள்ளனர்.

அந்தக் கறுப்புப் பெட்டியின் பாகங்கள் சேதமுற்றிருந்தாலும், நிபுணத்துவம் வாய்ந்த ஒரு ஆழ்கடல் மீட்புக் குழுவின் உதவியுடன் அந்த உரையாடல்களின் பதிவுகள் மீட்கப்பட்டிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, பயங்கரவாதச் செயலினால் விமானம் விழுந்து நொறுங்கியதா என்பது குறித்த மேலும் புதிய தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice