Home Featured உலகம் யூரோ: இங்கிலாந்து 2- வேல்ஸ் 1; கடைசி நிமிட கோல் இங்கிலாந்தைக் காப்பாற்றியது!

யூரோ: இங்கிலாந்து 2- வேல்ஸ் 1; கடைசி நிமிட கோல் இங்கிலாந்தைக் காப்பாற்றியது!

598
0
SHARE
Ad

euro-england-wales-scoreபாரிஸ்: ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 2 -1 என்ற கோல் எண்ணிக்கையில் வேல்சை வெற்றி கொண்டதன் மூலம் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

euro-england-celebrate goal-wales

இங்கிலாந்து நாட்டுக்கான கோலைப் போட்ட உற்சாகத்தில் இங்கிலாந்து ஆட்டக்காரர் வார்டி…

#TamilSchoolmychoice

முதல் பாதி ஆட்டத்தில் வேல்ஸ் ஒரு கோல் போட்டு இங்கிலாந்து அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முதல் பாதி ஆட்டம் முடியும் வரை வேல்ஸ் 1-0 என்ற நிலையில் முன்னணியில் இருந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தது. 90 நிமிட ஆட்டம் முடிந்த நிலையிலும் இரண்டு அணிகளுமே சமநிலையில் இருந்தன.

ஆனால், கூடுதலாக வழங்கப்பட்ட 3 நிமிடங்களில் இங்கிலாந்தின் ஆட்டக்காரர் ஸ்டரிஜ் போட்ட கடைசி நிமிடக் கோலால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

euro-england-wales-rooney

கோல் அடிக்க முயற்சி செய்யும் இங்கிலாந்து ஆட்டக்காரர் வெய்ன் ரூனி…