Home Featured உலகம் ‘சுடப்பட்டு, கத்தியால் குத்தப்பட்ட’ பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் உயிருக்குப் போராடுகின்றார்!

‘சுடப்பட்டு, கத்தியால் குத்தப்பட்ட’ பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் உயிருக்குப் போராடுகின்றார்!

806
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512இலண்டன் – தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பிரிட்டிஷ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ கோக்ஸ் இன்று துப்பாக்கியால் சுடப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டது பிரிட்டன் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மருத்துவமனையில் அவர் உயிருக்குப் போராடி வருகின்றார். பெட்லி மற்றும் ஸ்பென் தொகுதியைப் பிரதிநிதிக்கும் அவர், அண்மைய சில நாட்களாகத் தனது தொகுதியில் பிரிட்டன் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்து வந்தார்.

Jo Cox-british MP-attackedஇன்று அவர் தனது தொகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு நபருக்கும் ஜோ கோக்சுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, “முதலில் பிரிட்டன்” என அந்த நபர் முழக்கமிட்டதாகவும், அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடுகள் கேட்டதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

ஜோ கோக்ஸ் (படம்) மீது மூன்று துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததாகவும், அவர் தலையிலும் சுடப்பட்டார் என்றும் முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 52 வயதுடைய அந்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.