புதுடில்லி – தணிக்கைக் குழுவுடனான அனைத்துப் போராட்டங்களும் முடிவடைந்து, சர்ச்சைக்குரிய ‘உட்தா பஞ்சாப்’ நாளை வெளியாகவிருந்த நிலையில், நேற்று நண்பகல் 12.00 மணிக்கு, சட்டவிரோதமாக சுமார் 500 இணையத் தளங்களில் அந்தப் படத்தின் பிரதிகள் வெளியிடப்பட்டுள்ளது மேலும் பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
இணையத் தளங்களில் வெளியிடப்பட்ட பிரதி, தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்ட பிரதி என்பதால், தணிக்கைக் குழுவினரே சட்டவிரோதமாக இந்தப் படத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு வெளியிடப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து படம் வெளியாகியுள்ள சுமார் 150 இணையத் தளங்களை அரசாங்கம் முடக்கியுள்ளபோதும், இன்னும் சுமார் 350 இணையத் தளங்களில் இந்தப் படம் காணக் கிடைப்பதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.