கெய்ரோ – கடலில் விழுந்து நொறுங்கிய எகிப்து ஏர் விமானத்தின் மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டிகளின் தரவுகளை ஆய்வு செய்ததில், விமானம் கடலில் விழுந்து நொறுங்குவதற்கு முன் விமானத்தினுள் புகை வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கறுப்புப் பெட்டியின் ஒலிப்பதிவில், புகைக்கான எச்சரிக்கை ஒலி பதிவாகியுள்ளதை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த மே19-ம் தேதி பாரிசில் இருந்து கெய்ரோ நோக்கி 66 பயணிகளுடன் சென்ற எகிப்து ஏர் விமானம் மெடிட்டெரானியன் கடலில் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.