பதவி விலகுவதாக அறிவித்துள்ள டேவிட் கேமரூனுக்குப் (படம்) பதிலாக முன்னாள் இலண்டனர் மேயர் போரிஸ் ஜோன்சன் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நேற்று அவர் பிரதமர் பதவிக்குத் தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்து விட்டார்.
தனக்குப் பிறகு புதிய பிரதமராகப் பதவியேற்பவர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனை பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்றும் கேமரூன் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் பதவிக்கு தெரசா மே சுமுகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரிட்டனின் அடுத்த பிரதமராக இன்னொரு பெண்மமணி வரக் கூடும். மார்கரெட் தாட்சருக்குப் பின் மற்றொரு பெண் பிரதமரை பிரிட்டன் பெறும்.