Home Featured உலகம் எகிப்து ஏர் கறுப்புப் பெட்டிகள்: கடைசி நேரப் பதிவுகளை மீட்க அதிகாரிகள் தீவிரம்!

எகிப்து ஏர் கறுப்புப் பெட்டிகள்: கடைசி நேரப் பதிவுகளை மீட்க அதிகாரிகள் தீவிரம்!

817
0
SHARE
Ad

MS804-blakboxகெய்ரோ – கடலில் விழுந்து நொறுங்கிய எகிப்து ஏர் எம்எஸ்804 விமானத்தின் இரண்டு சேதமடைந்த கறுப்புப் பெட்டிகளை மீட்டுள்ள அதிகாரிகள், விமானத்தின் கடைசி நேரப் பதிவுகளை அதன் மூலமாகக் கண்டறிய ஆய்வுகள் செய்து வருகின்றனர்.

எனினும், அந்த இரு கறுப்புப் பெட்டிகளும் கடுமையாகச் சேதமடைந்திருப்பதால், அதனை மீட்க நிறைய கால அவகாசமும், முயற்சிகளும் தேவை என எகிப்து விமான விபத்து விசாரணைக் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர்களின் உதவியோடு, மீட்கப்பட்டுள்ள விமானிகள் அறையின் குரல் பதிவுக் கருவி (Cockpit Voice Recorder), விமான தரவுப் பதிவு கருவி ( Flight Data Recorder) ஆகியவற்றை ஆய்வு செய்து வருவதாகவும், விமானம் கடலில் விழுந்ததற்கான காரணங்கள் இதன் மூலம் கண்டறியப்படும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

கடந்த மே 19-ம் தேதி பாரிசில் இருந்து கெய்ரோ நோக்கி 66 பயணிகளுடன் சென்ற எகிப்து ஏர் எம்எஸ்804 விமானம் நடுவானில் கடலில் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.