
இலங்கையில் தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களான, சாவகச்சேரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், புளியங்குளம், திருகோணமலை, புத்தளம், மட்டக்களப்பு, மாத்தளை, கல்முனை, கம்பகா, நாவலப்பிட்டி, தெரணியகல், அட்டன், பண்டாரவளை, இறக்வானை ஆகிய 16 இடங்களில், அச்சிலைகளை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து விஜிபி நிறுவனங்களின் தலைவரும், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனருமான வி.ஜி.சந்தோசம் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘இந்திய–இலங்கை நட்புறவு பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இரு நாட்டுக்கும் உறவு மேலோங்கும் வண்ணம், தமிழ்ப் பணியின் ஓர் அங்கமாக, திருவள்ளுவர் சிலைகளை இலங்கைக்கு வழங்குகிறேன். அதன் வழியே உலகப் பொதுமறையாம் தமிழ்மறை திருக்குறளின் அருமையும், பெருமையும் உயர்ந்தோங்கும் என்பது திண்ணம்’’ என்று தெரிவித்துள்ளார்.