Home Featured வணிகம் பராமரிப்பு காரணமாக ஏர்ஆசியா இணையச் சேவைகள் 27 மணி நேரங்களுக்கு நிறுத்தம்!

பராமரிப்பு காரணமாக ஏர்ஆசியா இணையச் சேவைகள் 27 மணி நேரங்களுக்கு நிறுத்தம்!

853
0
SHARE
Ad

AirAsiaKLIA2கோலாலம்பூர் – ஏர் ஆசியா விமான நிறுவனத்தின் பயண முன்புதிவு மற்றும் இதர இணையச் சேவைகள் ( online check-in , My Booking, Air Asia mobile app, including airport kiosks) அனைத்தும்  பராமரிப்புப் பணிகள் காரணமாக, 27 மணி நேரங்களுக்கு தற்காலிக நிறுத்தம் செய்யப்படுவதாக  ஏர் ஆசியா அறிவித்துள்ளது.

நாளை செவ்வாய்கிழமை அதிகாலை 12.01 தொடங்கி, புதன்கிழமை அதிகாலை 3 மணி வரையில் விமான முன்பதிவு உள்ளிட்ட இச்சேவைகள் இருக்காது என ஏர் ஆசியா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

என்றாலும், நிர்ணயிக்கப்பட்ட அந்த நேரங்களில் ஏர் ஆசியா விமானங்கள் அனைத்து இயங்கும் என்றும், அச்சமயங்களில் விமானப் பயண முன்பதிவு செய்துள்ள பயணிகள், முன்கூட்டியே (இன்று திங்கட்கிழமை) இணைய தளம் மூலமாக தங்களது விமான அனுமதிச் சீட்டை ( boarding pass) பெற்றுக் கொள்ளும் படியும் ஏர் ஆசியா கேட்டுக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், பராமரிப்பு நடக்கும் அச்சமயங்களில் விமானப் பயணம் மேற்கொள்ளவுள்ள பயணிகள், குறைந்தது 4 மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையம் வந்து தங்களது பயணப் பெட்டிகளைக் கொடுத்து, பயணத்தை உறுதி செய்து கொள்ளுமாறும் ஏர் ஆசியா தெரிவித்துள்ளது.

காரணம், இணையச் சேவைகள் இல்லாத காரணத்தால் அதிகமான பயணிகள் வரிசையில் நிற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.