Home Featured கலையுலகம் ‘காதல்’ சுகுமாரின் ‘சும்மாவே ஆடுவோம்’ – இசை வெளியீடு!

‘காதல்’ சுகுமாரின் ‘சும்மாவே ஆடுவோம்’ – இசை வெளியீடு!

1244
0
SHARE
Ad

Kadhal sugumarசென்னை – ‘காதல்’ சுகுமார் ..தொலைக்காட்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி, பின் நகைச்சுவை நடிகராக உருவெடுத்து, ‘காதல்’ திரைப்படத்தில் நாயகனின் நண்பனாக வந்து நம்மை நெகிழச் செய்து, உலகநாயகன் கமல்ஹாசன் உட்பட பல முன்னணி ஹீரோக்களின் பாராட்டுகளையும், நன்மதிப்பையும் பெற்றவர்.

தற்போது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில், அவர் ஒரு இயக்குநராகவும் தனது திறமையை நிரூபித்து வருகின்றார்.

ஏற்கனவே ‘திருட்டு விசிடி’ என்ற வித்தியாசமான பெயருடன் படம் இயக்கி எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அவர், தற்போது அதே தயாரிப்பாளருடனே பணியாற்றி தனது இரண்டாவது படமான ‘சும்மாவே ஆடுவோம்’ என்ற திரைப்படத்தையும் உருவாக்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

“நடிகனாக இருந்தால் நான் மட்டும் சம்பாதித்து, நன்றாக வாழ்வேன். அதே இயக்குநராக இருந்தால், என்னைச் சுற்றியுள்ள பலருக்கும் வாய்ப்பளிக்கலாம்” என்று கூறும் சுகுமார், இப்படத்தில் நிறைய புதுமுகக் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார்.

Kadhal sugumar 1அதோடு, 45 நகைச்சுவைக் கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அனைத்துலக  நீச்சல் வீரர் அருண் பாலாஜி, அர்ஜுன், லீமா, ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேடைக்கலைஞருமான இப்படத்தின் தயாரிப்பாளர் டி என் ஏ ஆனந்தனும் முக்கியக் கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

இன்றைய காலக்கட்டத்தில் கூத்துக்கலையின் மீதான ஈர்ப்பு குறைந்து வருவது பற்றியும், ஆணவப்படுகொலைகள் பற்றியும் படம் பேசவிருப்பதாகக் கூறப்படுகின்றது.

நேற்று, ‘சும்மாவே ஆடுவோம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நடைபெற்றது. அதில் நடிகர் சிவா உட்பட பல முன்னணிக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் முருகன் மந்திரம் 4 பாடல்களும், உதயா மற்றும் கவிஞர் அஸ்மின் ஒரு பாடலும் எழுதியுள்ளனர். தற்போது இணையத்தில் அப்பாடல்களைப் பதிவிறக்கம் செய்து கேட்கலாம்.

இசைவெளியீட்டில் நடிகர் சிவா பேசும் காணொளி:-