Home Featured நாடு கால்பந்தாட்டத்தை விமர்சித்ததற்காக 1 வருட சிறையா? – கொதிக்கும் சுவாராம்!

கால்பந்தாட்டத்தை விமர்சித்ததற்காக 1 வருட சிறையா? – கொதிக்கும் சுவாராம்!

581
0
SHARE
Ad

Tunku-Ismail Johor Crown Princessஜோகூர் பாரு – கால்பந்து விளையாட்டை முன்வைத்து வைத்து, ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயிலுக்கு எதிராக நட்பு ஊடகத்தில் கருத்துத் தெரிவித்த 19 வயது இளைஞர் முகமட் அமிருல் அஸ்வான் மொகமட் ‌‌ஷக்ரிக்கு, ஜோகூர் நீதிமன்றம் 1 வருட சிறைத் தண்டனை வழங்கியிருப்பதற்கு சுவராம் திட்ட ஒருங்கிணைப்பாளர் (Suaram programme coordinator) அமிர் அப்துல் ஹாடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த இளைஞருக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுப்பது முறையல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கால்பந்து என்பது மக்களின் விளையாட்டு. விளையாட்டில் இருதரப்பினருக்கு இடையே சச்சரவுகளும், அவமானங்களும் இருக்கத் தான் செய்யும். அது கால்பந்தாட்டத்தில் சகஜம்.”

#TamilSchoolmychoice

“(அமிருலுக்கு சிறை) வழங்கியிருப்பது கூட்டரசு அரசியலமைப்பு ஆர்டிக்கில் 10-ன் படி, கருத்துரிமையைப் பறிப்பது போலாகும். அது நட்பு ஊடகத்தில் பகிரப்பட்ட ஒரு அறிக்கை அவ்வளவே. அதற்காக சிறையில் அடைப்பது சரியல்ல” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, முன்னாள் சட்ட அமைச்சர் சைட் இப்ராகிமும், 19 வயது இளைஞருக்கு 1 வருட சிறைத் தண்டனை அளித்திருப்பது சரியல்ல என்று வலியுறுத்தியுள்ளார்.

“அவருக்கு சிறை தண்டனை அளித்திருக்கக் கூடாது. யாராவது ஒருவர் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒருவேளை அவர் முதல் முறையாகத் தவறு செய்திருக்கலாம்” என்றும் சைட் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.