புதுடில்லி – இன்று மாலை புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜெயலலிதா நடத்திய சந்திப்பு குறித்த முக்கிய அம்சங்கள்:
- புதுடில்லி விமான நிலையம் வந்தடைந்த ஜெயலலிதாவுக்கு, அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றார்.
புதுடில்லி தமிழ் நாடு இல்லம் வந்தடைந்த ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் மரியாதை அணிவகுப்பு நடத்தி வரவேற்பு அளித்தனர். அந்த வரவேற்பை ஜெயலலிதாக ஏற்றுக் கொண்ட பின்னர் அவரது அலுவல்கள் தொடங்கின.
பிரதமர் மோடியை பிற்பகல் 4.30 மணியளவில் சந்தித்த ஜெயலலிதா, அவரிடம் தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
- மோடியுடனான ஜெயலலிதாவின் சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது.
- மோடியைச் சந்தித்த பின்னர் ஜெயலலிதா, மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
- பாஜகவின் மற்றொரு இணை அமைச்சரான பொன்.இராதாகிருஷ்ணனையும் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். அவர்களின் பேச்சுவார்த்தை குளச்சல் துறைமுகம் போன்ற விவகாரங்களை மையமாகக் கொண்டிருந்தது.