Home Featured தமிழ் நாடு சுவாதி கொலை: ராம்குமாருக்கு கழுத்தில் 18 தையல்கள்!

சுவாதி கொலை: ராம்குமாருக்கு கழுத்தில் 18 தையல்கள்!

866
0
SHARE
Ad

Suvathiசென்னை – இன்போசிஸ் பெண் பொறியியலாளர் சுவாதியைக் கொலை செய்ததாக நம்பப்படும் ராம்குமாருக்கு, கழுத்தில் 18 தையல் போடப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுவாதியை கடந்த வாரம் நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் கொலை செய்துவிட்டு, தப்பியோடிய ராம்குமார், திருநெல்வேலி அருகேயுள்ள தனது சொந்த ஊருக்குச் சென்று அங்கு இத்தனை நாட்கள் பதுங்கி இருந்துள்ளார்.

நேற்று மாலை காவல்துறை  தன்னை நெருங்கிவிட்டதை அறிந்த ராம்குமார் வீட்டின் உள்ளேச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டு பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த அதிகாரிகள், அங்கு கழுத்தறுபட்ட நிலையில் விழுந்துக் கிடந்த ராம்குமாரை  மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும், தொண்டையில் கடுமையான காயங்கள் இருப்பதால் ஒரு சிலநாட்கள் அவர் பேச முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராம்குமார் ஆலங்குளத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் பொறியியல் படித்து பட்டம் பெற்றவர் என்று கூறப்படுகிறது. ஒருதலை காதல் காரணமாக சுவாதியை அவர் கொலை செய்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.

இந்தக் கொலை அவரது நண்பர் ஒருவருக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்றும் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவரும் பிடிபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.