Home Featured நாடு கார் மீது கிரேனின் ஒருபகுதி விழுந்து பெண் மரணம்!

கார் மீது கிரேனின் ஒருபகுதி விழுந்து பெண் மரணம்!

778
0
SHARE
Ad

crane-collapse-car1கோலாலம்பூர் – நேற்று வியாழக்கிழமை இரவு, ஜாலான் ராஜா சோழன் சாலையில், பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் மீது, கிரேன் ஒன்றின் கொக்கி விழுந்ததில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

பினாங்கு, ஜார்ஜ் டவுனைச் சேர்ந்த சின் கூன் சிங் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ள அப்பெண், நேற்று இரவு 7.20 மணியளவில் அச்சாலையைக் கடக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது பெவிலியன் வணிக வளாகத்தின் ஒரு பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டுமானப் பணிகளுக்காக, கட்டிடத்தின் மேல் அமைக்கப்பட்டிருந்த கிரேனில் இணைக்கப்பட்டிருந்த அதன் கொக்கி (Hook) கழன்று காரின் மேற்புறத்தில் விழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

டன் கணக்கில் எடையுள்ள அந்த ஹூக் விழுந்ததில், காரில் இருந்த சின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.