Home Featured நாடு கமலநாதன் துரித நடவடிக்கை: தமிழ்மொழி பற்றிய தவறுக்கு பதிப்பகம் மன்னிப்பு!

கமலநாதன் துரித நடவடிக்கை: தமிழ்மொழி பற்றிய தவறுக்கு பதிப்பகம் மன்னிப்பு!

1017
0
SHARE
Ad

Kamal

கோலாலம்பூர் – தமிழ் மொழி கிரேக்கம், போர்த்துகீசு, ஆங்கிலம் மற்றும் கிழக்கத்திய நாடுகளில் இருந்து பெறப்பட்ட சொற்களால் உருவானது என ஆக்ஸ்போர்டு ஃபாஜார் பதிப்பகத்தின், ‘பகாசா மலாயு எஸ்டிபிஎம் ஏஸ் எகெட்’ (Bahasa Malayu STPM Ace Ahead) பாடப் புத்தகத்தில், 97-வது பக்கத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், அதனையறிந்த மலேசிய இந்தியர்கள் பலர், அது குறித்து கடும் விமர்சனங்களை வெளியிட்டு வந்தனர்.

#TamilSchoolmychoice

அதனையறிந்த கல்வித் துணையமைச்சர் பி.கமலநாதன் உடனடியாக சம்பந்தப்பட்ட பதிப்பகத்தினை நேரில் சந்தித்து நிகழ்ந்துள்ள தவறு குறித்து விளக்கமளித்ததைத் தொடர்ந்து, அக்கருத்தைதை மீட்டுக் கொள்வதாக உறுதியளித்துள்ள அப்பதிப்பகம், தனது மன்னிப்பையும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனிடையே இத்தகவலை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள கமலநாதன் அதில் கூறியிருப்பதாவது:-

“ஆக்ஸ்போர்டு ஃபாஜார் பதிப்பகத்தின் மூத்த நிர்வாகியை இன்று சந்தித்தேன். அந்தப் புத்தகத்திலுள்ள தவறான கருத்தால் இந்திய சமுதாயத்தினரிடையே எழுந்துள்ள கோபத்தையும், என்னுடைய அதிருப்தியையும் சுட்டிக் காட்டினேன். உண்மைக்கு முரணாக இருக்கும் அக்கருத்திற்காக அவர்கள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள். தவறான கருத்துடைய அப்பதிப்பு மலேசியாவிலுள்ள அனைத்து புத்தகக் கடைகளிலிருந்தும் திரும்பப் பெறப்படும் என்று உறுதியளித்தனர். இந்தத் தவறுக்கு ஆக்ஸ்போர்டு ஃபாஜார் பதிப்பகம் முழுப் பொறுப்பு ஏற்றுக் கொண்டது”

“இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்துமாறும், அந்த அறிக்கையை என்னிடம் சமர்ப்பிக்குமாறும் ஆக்ஸ்போர்டு ஃபாஜாரிடம் கேட்டுக் கொண்டேன். இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்கக் கூடாது என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினேன். அதோடு இது போன்ற தவறுகள் இருந்தால் மற்ற அனைத்து பதிப்பகங்களும் உடனடியாகத் திருத்திக் கொள்ளும் படி அறிவுறுத்தினேன்.” இவ்வாறு கமலநாதன் தெரிவித்துள்ளார்.