Home Featured நாடு 60 சதவிகிதம் தமிழ் நிகழ்ச்சிகள் – அரசாங்கத்தின் நாம் டிவி அறிமுகம்!

60 சதவிகிதம் தமிழ் நிகழ்ச்சிகள் – அரசாங்கத்தின் நாம் டிவி அறிமுகம்!

841
0
SHARE
Ad

Nam tvகோலாலம்பூர் – 60 சதவிகிதம் தமிழ் நிகழ்ச்சிகளும், 40 சதவிகிதம் மலாய் மற்றும் ஆங்கில நிகழ்ச்சிகளையும் கொண்ட அரசாங்கத்தின் புதிய தொலைக்காட்சியான  ‘நாம் டிவி’ (நாம் தொலைக்காட்சி) இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

தலைநகர் டைனஸ்டி தங்கும்விடுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த அறிமுக விழாவில், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக துணை அமைச்சர் டத்தோ ஜைலானி ஜோஹாரி அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.

இந்நிலையில், நாம் டிவியின் நிர்வாக இயக்குநர் சாஹுல் ஹமீத் மொகமட் கூறுகையில், நாம் டிவி எனப் பெயரிடக் காரணம் தமிழில் நாம் என்றால், அனைவரும் என்று அர்த்தம் என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்தப் பெயர் இந்தியர்களை எதிரொலிக்க வேண்டும் அதே வேளையில், மலேசியர்களாகவும் பொருள் தர வேண்டும் என்பதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

வரும் ஜனவரி 2017 முதல் இயங்கவுள்ள  நாம் டிவி, காலை 6 மணி தொடங்கி நள்ளிரவு 12.30 மணி வரையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.