Home Featured நாடு கடலுக்குள் விழுந்த 2 இராணுவ வீரர்களைத் தேடும் பணி தீவிரம்!

கடலுக்குள் விழுந்த 2 இராணுவ வீரர்களைத் தேடும் பணி தீவிரம்!

785
0
SHARE
Ad

army-missingஅலோர் ஸ்டார் – புலாவ் பேராக் கடற்பகுதியில் தவறி விழுந்த இரண்டு இராணுவ வீரர்களைத் தேடும் பணி இன்று புதன்கிழமை மூன்றாவது நாளாகத் தொடர்ந்து வருகின்றது. எனினும், இதுவரை எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், இன்று மலேசிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த திங்கட்கிழமை மாலை 4.40 மணியளவில் மாயமான இரு வீரர்களையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது.

ஜோபார்ட்லீ கானில் (வயது 32), மொகமட் பைசோல் ரோஸ்லி (வயது 29) ஆகிய இருவரும் ராக்கி தீவில் (லங்காவியிலிருந்து தென்மேற்கில் 66 கடல் மைல் தொலைவில் உள்ள தீவு) உள்ள மலைக் குன்றின் மேல் நீர் சேமித்துக் கொண்டிருக்கும் போது, கடலுக்குள் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.