Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘கடவுள் இருக்கான் குமாரு’ – எதிர்பார்த்த காமெடி இல்லையேப்பா!

திரைவிமர்சனம்: ‘கடவுள் இருக்கான் குமாரு’ – எதிர்பார்த்த காமெடி இல்லையேப்பா!

1804
0
SHARE
Ad

kik

கோலாலம்பூர் – ஒட்டுமொத்த குடும்பமும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் தான் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பேன் என்று கதாநாயகி நான்சியின் (ஆனந்தி) அப்பா மைக்கேல் ஆசீர்வாதம் (எம்.எஸ்.பாஸ்கர்) கூறிவிடுவதால், அவளைப் பிரியும் குமார் (ஜி.வி.பிரகாஷ்), பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த பெண்ணான பிரியாவை (நிக்கி கல்ராணி) திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார்.

திருமணத்திற்கு இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், நண்பன் ஆர்.ஜே பாலாஜி, பாண்டிச்சேரியில் ஏற்பாடு செய்யும் பேச்சிலர்ஸ் பார்ட்டிக்கு பல பொய்களைச் சொல்லிவிட்டு செல்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஆனால் அங்கு, போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜ் ரூபத்தில் ஒரு பிரச்சினை வருகின்றது.

#TamilSchoolmychoice

அதைச் சமாளித்து சரியான நேரத்தில் திருமணத்திற்கு வந்து சேர்ந்தாரா? நிக்கியைத் திருமணம் செய்தாரா? என்பதே கிளைமாக்ஸ்.

அப்படின்னா நான்சி வாழ்க்கை? என்று கண்ணீரோடு கேட்கும் அளவிற்கோ, ‘அவ இன்னும் என்னைப் போட்டுத் தாக்கிக்கிட்டு இருக்கா’ என்று விண்ணைத்தாண்டி வருவாயா கணக்கா நெஞ்சில குத்தி, காதலியை நினைத்து ஏங்கும் அளவிற்கோ இந்தப் படம் ஒரு காதல் காவியம் இல்லங்க..

kik1

‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ என்று போய்ட்டே இருக்கும் வெர்ஜின் பாயான ஜி.வி.பிரகாஷ், இரண்டில் ஏதோ ஒன்னு கிடைத்தால் ‘ஓகே.. ஓகே’ என்று சொல்லும்படியாக, திரையரங்குக்கு வருபவர்களை சிரிக்க வைக்க மட்டுமே படமெடுப்பேன் என்று இம்முறையும் தனது ரெக்கார்டை தக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ராஜேஸ்.

ஆனால் ‘கடவுள் இருக்கான் குமாரு’ அவர் எதிர்பார்க்கும் அளவிற்கு நம்மை சிரிக்க வைக்கிறதா? என்பது கேள்விக் குறி தான்.

நடிப்பு

டார்லிங்கில் இருந்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பைப் பார்த்து ரசித்து வருகிறீர்கள் என்றால், சந்தேகமே வேண்டாம் இந்தப் படத்திலும் அவரை உங்களுக்குப் பிடிக்கும். காரணம்.. மனிதர் அதே தலைமுடி, தாடி மீசை, பட்டன் போடாத சட்டை என்று வெர்ஜின் பாயாகவே வலம் வந்திருக்கிறார்.

அதுமட்டுமா? அதே முகபாவனை, அதே உடல்மொழி, அதே காதல் தோல்வி .. இப்படியாக படத்தில் பல ‘அதே’ -க்கள் உள்ளன அவரிடம்.

kik2

ஆனந்தி.. வளர்ந்த குழந்தை போல் இருக்கிறார். விதவிதமான ஆடைகள் அணிந்து சர்ச்சுக்கும், ரோட்டுக்குமாக நடக்க வைத்தே படத்தை ஓட்டியிருக்கிறார்கள்.

மற்றபடி படத்தில் அவருக்கு நடிப்பதற்கென்று சொல்லிக்கொள்ளும் படியான காட்சிகள் இல்லை. (ரூட்டை மாற்றுவது எதிர்காலத்திற்கு நல்லது)

நிக்கி கல்ராணி.. படத்தின் தொடக்கத்தில் வருகிறார். பின்னர் படத்தின் இறுதிக் காட்சிகளில் தான் வருகின்றார். க்ளோசப் காட்சிகளில் பார்க்கவே முடியாத படி ஒப்பனை படுமோசம்.

kadavul-irukaan-kumaru-movie-stills-2

ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், சிங்கம்புலி இவர்களை வைத்து ஓரளவு காமெடி பண்ண முயற்சி செய்திருக்கிறார்கள்.

ரசிக்க

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி, தமிழ்நாடு போலீஸ், பேசுவதெல்லாம் உண்மை, கும்பகோணம் காபி, ஸ்ருதிஹாசன், சென்னை ஏர்போர்ட் கூரை என பேஸ்புக், டுவிட்டரில் என்னவெல்லாம் கிண்டல் செய்யப்படுகின்றனவோ அவை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக படத்தில் வசனங்களின் வழி கலாய்த்திருக்கிறார்கள்.

அதிலும், ஊர்வசியை நடுவராக வைத்து அந்த ‘பேசுவதெல்லாம் உண்மை’ காட்சி, நம்மை மறந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றது.

kadavul-irukaan-kumaru-2

ரோபோ சங்கர்… கமல்ஹாசன் பாணியில் நேரலை செய்தியை சொல்வது காமெடியின் உச்சம்..

இப்படியாக படத்தில் ரசிப்பதற்கு ஆங்காங்கே சில வசனங்களும், காட்சிகளும் உள்ளன.

“டேய் மச்சான்.. போலீஸ் ஸ்டேசன் போய் கம்பிளைன்ட் குடுக்கலாமா?”

“அங்கையா? வாயில வயரை வச்சி மேல அனுப்பிருவானுங்க”

“டேய்.. மச்சான்.. எல்லா பொண்ணுங்களும்.. சாய்பல்லவி மாதிரி இருக்கணும்னு நாம நெனக்கிறோம்.. ஆனால் ஸ்ருதிஹாசனாவும் இருக்கே என்ன செய்ய?” – படத்தில் இடம்பெறும் வசனங்களுக்கு இவை உதாரணம்.

சொதப்பல்

படம் தொடங்கியது முதல் முடிவு வரை, ராஜேஸ், ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய திரைப்படம் பார்க்கிறோம் என்ற எந்த ஒரு உணர்வையும் தரவில்லை. இதற்கு முந்தைய படங்களில் பார்த்த அதே பழைய மசாலா வாசனை படம் முழுவதும்..

ராஜேஸ் படம் என்றால், மக்கள் விரும்பிப் பார்க்க வருவது அதில் கதையோடு தொடர்புடைய காமெடிக் காட்சிகள் தான்.. ஆனால் இப்படத்தில் அது மிகவும் குறைவு தான்..

kadavul-irukkaan-kumaru

ஜவ்வாக இரண்டாம் பாதி இழுத்துக் கொண்டிருக்க இடையில், கதைக்கு சம்பந்தமே இல்லாத வகையில் பேய் பங்களா காட்சிகளை திணித்திருப்பது ரசிக்க முடியவில்லை.

சரி பாடல்களையாவது ரசிக்க முடிகின்றதா? என்றால் அதுவும் இல்லை.

‘லொக்காலிட்டி’ பாய்ஸ் தவிர மற்றவை அனைத்தும் மனதில் நிற்காத அளவுக்கு படு சுமார்..

சக்தி சரவணன் ஒளிப்பதிவில் பாடல்களில் சிலவற்றை மலேசியாவில் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் – ‘கடவுள் இருக்கான் குமாரு’ – எதிர்பார்த்த காமெடி இல்லையேப்பா..

-ஃபீனிக்ஸ்தாசன்