Home Featured உலகம் பண்டா ஆச்சேவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி!

பண்டா ஆச்சேவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி!

1066
0
SHARE
Ad

banda-aceh-earthquakeபண்டா ஆச்சே – இந்தோனிசியாவின் வடக்குப் பதியான ஆச்சேவில், இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.

“இந்த நிலநடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாக உணரப்பட்டதோடு, கட்டிடங்கள் சரிந்ததால் அப்பகுதியில் வசிப்பவர்கள் அதிர்ச்சியில் வீட்டை விட்டு வெளியேறினர்” என்று தகவல்கள் கூறுகின்றன.

இதுவரையிலான நிலவரப்படி இப்பேரிடரில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

#TamilSchoolmychoice