Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டு விவகாரம்: தமிழகத்தில் கடையடைப்பு!

ஜல்லிக்கட்டு விவகாரம்: தமிழகத்தில் கடையடைப்பு!

943
0
SHARE
Ad

Jallikattuசென்னை – ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உடனடித் தீர்வு காண வேண்டும் என்று கூறி, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை இன்று வியாழக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் நாளை கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு அறிவித்துள்ளது.

அதேவேளையில், தனியார் பள்ளிகளும் இயங்காது எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.