Home Featured வணிகம் ஆனந்த கிருஷ்ணன் உச்ச நீதிமன்றம் வரவேண்டும் – மலேசிய சன் பத்திரிக்கையில் அறிவிப்பு!

ஆனந்த கிருஷ்ணன் உச்ச நீதிமன்றம் வரவேண்டும் – மலேசிய சன் பத்திரிக்கையில் அறிவிப்பு!

1268
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று முன்தினம் 23 ஜனவரி 2017 தேதியிட்ட சன் ஆங்கில நாளிதழில் மலேசியக் கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் அவரது வணிக நண்பர், அவரது இரண்டு நிறுவனங்கள் ஆகியவை மீதான இந்திய உச்ச நீதிமன்ற உத்தரவு பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஆனந்த கிருஷ்ணன், ரால்ப் மார்ஷல், ஆகிய இருவரும் மற்றும் அஸ்ட்ரோ ஆல் ஆசியா நெட்வொர்க்ஸ்,  மேக்சிஸ் கொம்யுனிகேஷன்ஸ் பெர்ஹாட் ஆகிய இரு நிறுவனங்களும் தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பு விளம்பரமாக சன் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த நால்வருக்கும் எதிரான நீதிமன்ற உத்தரவைச் சார்வு செய்ய மலேசிய அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் மறுத்ததைத் தொடர்ந்து இந்த விளம்பரம் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளது.

ananda krishnan-sun paper-adசன் பத்திரிக்கையில் 23 ஜனவரி வெளியிடப்பட்ட 2 பக்க விளம்பரத்தின் ஒரு பகுதியில் ஆனந்த கிருஷ்ணன், மாறன் சகோதரர்கள் உள்ளிட்டவர்கள் பெயர்ப் பட்டியலைக் காணலாம்