Home Featured தமிழ் நாடு தன்னை விமர்சித்த சுவாமிக்கு கமல் பதிலடி!

தன்னை விமர்சித்த சுவாமிக்கு கமல் பதிலடி!

788
0
SHARE
Ad

swami240117_1சென்னை – ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்திய போது முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களிடம் சென்று பேசியிருக்கலாம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்தை, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி ‘முட்டாள்தனமானது’ என்று டுவிட்டரில் விமர்சித்திருந்தார்.

“போராட்டக்காரர்களை முதல்வர் சந்திக்க வேண்டும் என்று சினிமாவாலா கமல்ஹாசன் கூறுவது எவ்வளவு முட்டாள் தனமானது. மதுரையில் முதல்வர் அதனை முயற்சித்துப் பார்த்த போது என்ன ஆனது?” என்று சுப்ரமணிய சுவாமி தெரிவித்திருந்தார்.

அதற்கு டுவிட்டரிலேயே பதிலளித்த கமல்ஹாசன், “ஹாய் சுவாமி.. நான் தமிழ்வாலா.. முதல்வர்கள் அவரது மக்களைச் சந்திக்க தான் வேண்டும். அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்தும்” என்று கமல் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மேலும், இதற்கு மேல் சாமியின் அபத்தமான கருத்துக்களுக்குப் பதிலளிக்கப் போவதில்லை என்றும் கமல் தெரிவித்தார்.