Home Featured நாடு “பாஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயார்” – கிட் சியாங்

“பாஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயார்” – கிட் சியாங்

790
0
SHARE
Ad

Lim-Kit-Siang

கோலாலம்பூர் – ஜசெகவுக்கும், பாஸ் கட்சிக்கும் இடையிலான உறவு முறிந்து விட்டது – இனி மீண்டும் இரு கட்சிகளும் ஒன்றிணைய முடியாது என கருத்துகள் கூறப்பட்டு வரும் வேளையில் “மலேசியாவைக் காப்பாற்றவும், நாட்டின் நன்மைக்காகவும், பாஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயார்” என லிம் கிட் சியாங் அறிவித்துள்ளார்.

“இதற்காக நான் திசை திரும்பிவிட்டேன் (யூ-டர்ன்) என்பது அர்த்தமாகாது. குறுகிய நோக்கமுடையவர்களும், அரசியல் இலாபம் தேடுபவர்களும்தான் அவ்வாறு கூறுவார்கள். ஆனால், மலேசியா மீது நான் கொண்டுள்ள நாட்டு விசுவாசத்தையும், ஈர்ப்பையும் எடுத்துக் காட்டும் விதமாக, நாட்டைக் காப்பாற்றுவதற்காக பாஸ் கட்சியுடன் நான் கைகோர்க்கத் தயார்” எனவும் ஜனநாயக செயல்கட்சியின் மூத்த தலைவரும், கேலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“எனது நிலைப்பாடு குறித்து ஹாடி அவாங் என்ன நினைக்கிறார் என்பது குறித்து எனக்கு கவலையில்லை. ஆனால் எங்களுக்கிடையில் இருக்கும் மிகப் பெரிய அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு இடையிலும், ஹாடியோடு இணைந்து மலேசியாவைக் காப்பாற்றுவதில் நான் பணியாற்றத் தயாராக இருக்கின்றேன்” என கிட் சியாங் தெரிவித்துள்ளார்.