Home Featured நாடு சென்னை மலேசியத் துணைத் தூதரக அதிகாரிகளுடன் தேவமணி சந்திப்பு!

சென்னை மலேசியத் துணைத் தூதரக அதிகாரிகளுடன் தேவமணி சந்திப்பு!

1065
0
SHARE
Ad

சென்னை – தமிழகத்திற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் மஇகா தேசியத் துணைத் தலைவரும், பிரதமர் துறை துணையமைச்சருமான செனட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி கடந்த வியாழக்கிழமை பிப்ரவரி 2 ஆம் தேதி சென்னையிலுள்ள மலேசியத் துணைத் தூதரகத்திற்கு வருகை தந்தார்.

devamany-consulate gen-chennaiசென்னையிலுள்ள மலேசியத் துணைத் தூதர் அகமட் பாஜரசாமுடன் தேவமணி…

அங்கு சென்னைத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தியதோடு, சென்னையிலுள்ள மலேசியாவுக்கான துணைத் தூதர் அகமட் பாஜரசாம் பின் அப்துல் ஜாலிலுடன் சந்திப்பு ஒன்றை நடத்தி, மலேசியாவுக்கும், தமிழகத்திற்கும் இடையிலான தூதரக நல்லுறவுகள் தொடர்பான விவகாரங்கள் குறித்து விளக்கங்கள் பெற்றார்.

#TamilSchoolmychoice

devamany-consulate general-chennai-group photoசென்னை மலேசியத் துணைத் தூதரக அதிகாரிகளுடன் தேவமணி…

தேவமணிக்கு சிறப்பான வரவேற்பை வழங்கிய துணைத் தூதரக அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தைகளின்போது மலேசிய இந்தியர்களுக்கும் தமிழகத்திற்கும் இடையில் உள்ள தொடர்புகள் குறித்த விவகாரங்கள், குறிப்பாக தமிழகத்தில் பயிலும் மலேசிய மாணவர்களின் நிலைமைகள் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டதோடு, இந்த அம்சங்கள் மீதிலான தனது கருத்துகளையும் தூதரக அதிகாரிகளிடம் தேவமணி தெரிவித்தார்.

devamany-meeting consulate gen-chennaiதுணைத் தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தும் தேவமணி…

அடுத்து: சசிகலாவுடன் தேவமணி சந்திப்பு