Home இந்தியா அமெரிக்க டாலர் வைத்திருந்த மலேசியர் சென்னை விமான நிலையத்தில் கைது

அமெரிக்க டாலர் வைத்திருந்த மலேசியர் சென்னை விமான நிலையத்தில் கைது

1313
0
SHARE
Ad
சென்னை விமான நிலையம் – கோப்புப் படம்

சென்னை – சென்னையிலிருந்து கோலாலம்பூருக்கு வரும் வழியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவிக்காமல் 67,600 அமெரிக்க டாலர்களை ரொக்கமாகக் கொண்டு சென்ற மலேசியப் பெண்மணி ஒருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

மலேசியரான அவரது கைது குறித்து சென்னையிலுள்ள மலேசியத் துணைத் தூதரகத்திற்கு தமிழக சுங்கத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் என சென்னை மலேசியத் துணைத் தூதரகத்திற்கான தூதர் கே.சரவணன் உறுதிப்படுத்தியுள்ளார்.

“அவர் எங்களை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை. எனினும் அவரைத் தொடர்பு கொள்ள நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்” என சரவணன் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கைது செய்யப்பட்ட பெண்மணி 54 வயதான ராயவரப்பு ஸ்ரீதேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைதுக்குப் பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். விசாரணைகள் தொடர்கின்றன.

இந்தியாவிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக பணம் ரொக்கமாக வெளிநாடு கொண்டு செல்வது குற்றமாகும். குறிப்பாக தேர்தல் காலங்களில் தகுந்த ஆவணங்கள், முன்னறிவிப்புகள் இன்றி ரொக்கமாகக் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.