Home இந்தியா மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியில்லை

மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியில்லை

971
0
SHARE
Ad
வாரணாசியில் மக்கள் பேரணியில் நரேந்திர மோடி

புதுடில்லி – இந்திய அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நரேந்திர மோடி – பிரியங்கா காந்தி இடையிலான போட்டி நடைபெற வாய்ப்பில்லை. ஊடகங்கள் தொடர்ந்து ஆரூடங்கள் கூறிவந்திருந்தாலும், மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் பிரியங்கா போட்டியிடப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

இதற்கிடையில் நாளை வெள்ளிக்கிழமை ஏப்ரல் 26-ஆம் தேதி வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்யவிருக்கும் மோடி இன்று வாரணாசி வந்தடைந்தார்.

பாஜக தலைவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உடன் கலந்து கொள்ள வாரணாசியில் மாபெரும் பேரணியை நடத்திய மோடிக்கு மக்கள் திரண்டு வந்து தங்களின் ஆதரவைப் புலப்படுத்தியுள்ளனர். அந்தப் பேரணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டார்.