Home Featured கலையுலகம் “புரியாதோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” – டுவிட்டரில் கமலின் புதிய பதிவு!

“புரியாதோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” – டுவிட்டரில் கமலின் புதிய பதிவு!

993
0
SHARE
Ad

kamalசென்னை – உலகநாயகன் கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவுகளை, ஆய்வு செய்து பேஸ்புக்கில் கவிஞர் மகுடேசுவரன் உட்பட கவிஞர்கள் பலர், விளக்கம் தரும் அளவிற்கு புரியாத புதிராகவே இருந்து வருகின்றது.

கமலின் இது போன்ற பதிவுகளை ஒரு தரப்பு மறைமுகமாக மீம்ஸ் போட்டுக் கிண்டலடித்து வந்தாலும் கூட, உலக நாயகனின் உள்ளார்ந்த அர்த்தங்களை விளங்கிக் கொண்டவர்களுக்கு புதிர் போட்டியில் வெற்றி பெற்றதற்கு ஒப்பான மகிழ்ச்சியை அளித்து வருகின்றது.

நேற்று சட்டமன்றத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கமல் ஏதாவது சொல்லுவாரா? என்று ஆவலோடு காத்திருந்த இணைவாசிகளுக்கு, தடாலென வந்தது ஒரு கீச்சு.

#TamilSchoolmychoice

“பீலிபேய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின். குறள். புரியாதோர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கமல் கூறியிருக்கிறார்.

நிச்சயமாக, இப்போது கவிஞர் மகுடேசுவரனின் உள்தகவல் பெட்டி விளக்கம் கேட்டு நிறைந்திருக்கும்.