Home Video இந்தியன் 2 – ‘தாத்தா’ ஜூன் மாதம் மீண்டும் வருகிறார்!

இந்தியன் 2 – ‘தாத்தா’ ஜூன் மாதம் மீண்டும் வருகிறார்!

510
0
SHARE
Ad

சென்னை : பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எந்தத் தேதியில் வெளியாகும் என்பது அறிவிக்கப்படவில்லை.

எனினும், ஜூன் 4-ஆம் தேதி இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில், இந்தியன்-2 ஜூன் 13-ஆம் தேதி வெளியாகும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் இந்தியன்-2 படம் குறித்த முன்னோட்டம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியன் படத்தை இயக்கிய ஷங்கர் மீண்டும் 2-ஆம் பாகத்தை இயக்க, இந்தியன் தாத்தாவாக கமல் மீண்டும் திரும்புகிறார். அவர் கைதாகி அழைத்து வரப்படுவதைப் போல் படத்தின் விளம்பரப் பதாகைகள் எடுத்துக் காட்டுகின்றன.

#TamilSchoolmychoice

இந்தியன் தாத்தாவின் இளமைக் கால சுதந்திரப் போராட்டங்கள் படத்தில் முக்கியக் காட்சிகளாக திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன்-2 திரைப்படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: