Home நாடு கோலகுபுபாரு இடைத் தேர்தல்: பரிசீலிக்கப்படும் வேட்பாளர்கள்!

கோலகுபுபாரு இடைத் தேர்தல்: பரிசீலிக்கப்படும் வேட்பாளர்கள்!

315
0
SHARE
Ad

கோலகுபுபாரு : மே 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலில், பக்காத்தான் ஹாரப்பான் சார்பில் ஜசெக மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. வேட்பாளர் யார் என்பது இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 7) நடைபெறும் பக்காத்தான் ஹாரப்பான் தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். எனினும், எப்போது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்பது தெரியவில்லை.

இதற்கிடையில் ஜசெகவின் சில வேட்பாளர்கள் பரிசீலிக்கப்படுகின்றனர். இலக்கவியல் (டிஜிட்டல்) அமைச்சர் கோபிந்த் சிங்கின் அரசியல் செயலாளர் மன்தீப் சிங் அவர்களில் ஒருவர் என மலேசியாகினி செய்தி தெரிவித்தது.

உலு சிலாங்கூர் நகர மன்ற உறுப்பினர் சரிபா பாக்கார் – செலாயாங் நகர மன்ற உறுப்பினர் ஆலிஸ் சூ ஃபூங் தை – ஆகிய இருவரும் பரிசீலிக்கப்படும் மற்ற இரு வேட்பாளர்களாவர்.

#TamilSchoolmychoice

மன்தீப் 2018-இல் 14-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அரசியலில் நுழைந்தவர். பெர்சே இயக்கத்தின் செயல்பாட்டாளராக அறியப்படுகிறார்.

உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வட்டாரமான கலும்பாங்கைச் சேர்ந்த மன்தீப் (38 வயது), பல ஆண்டுகளாக கோலகுபுபாருவில் வசிப்பவர்களுக்கு உதவுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

46 விழுக்காடு மலாய் வாக்காளர்கள் இருப்பதால் ஜசெக மலாய் வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் உலு சிலாங்கூர் நகரமன்ற உறுப்பினர் சரிபா பாக்கார் ஒரு வேட்பாளராகப் பரிசீலிக்கப்படுகிறார் எனவும் மலேசியாகினி செய்தி தெரிவித்தது.

மார்ச் 21 அன்று நடப்பு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங்கின் மரணத்தைத் தொடர்ந்து கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதி காலியானது.

கோலகுபுபாரு இடைத்தேர்தல் மே 11-ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் ஏப்ரல் 27-ஆம் தேதி என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதற்கட்ட வாக்குப்பதிவு தேதி மே 7-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.