Home Featured இந்தியா சசிகலா பதவியேற்புக்கு தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

சசிகலா பதவியேற்புக்கு தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

1030
0
SHARE
Ad

sasikala-speaking-admk-meetபுதுடில்லி – நாளை செவ்வாய்க்கிழமை தமிழகத்தின் அடுத்த முதல்வராக வி.கே.சசிகலா பதவியேற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அவருடைய பதவியேற்புக்கு தடை வழங்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டுள்ளதால், சசிகலாவின் பதவியேற்பு ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

இருப்பினும், நாளைக் காலை 8.30 மணியளவில் சசிகலாவின் பதவியேற்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், உச்ச நீதிமன்றம் நாளைக் காலை 10.00 மணிக்குத்தான் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் சசிகலாவின் பதவியேற்புக்கு எதிரான தடை உத்தரவை விசாரிக்கும் நேரத்தில் சசிகலாவின் பதவியேற்பு நடந்து முடிந்திருக்கும்.

எனவே, உச்ச நீதிமன்றம் சசிகலாவின் பதவியேற்புக்குப் பின்னர் விசாரணை நடத்தி, அவர் முதல்வராகத் தொடர்வதற்கு தடை விதிக்குமா என்ற பரபரப்பு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வாரத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கவிருப்பதாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

-செல்லியல் தொகுப்பு