Home Featured இந்தியா “சசிகலாவை விடுவிக்க முடியாது” – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

“சசிகலாவை விடுவிக்க முடியாது” – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

1130
0
SHARE
Ad

supreme-courtபுதுடெல்லி – சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வெளியானது.

அதன்படி, மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த விடுதலை தீர்ப்பை இரத்து செய்வதாகவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதன்படி, இன்று மாலைக்குள் சசிகலா உள்ளிட்டோர் சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளனர். எனவே, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதியானது.