Home Featured தமிழ் நாடு ‘மாலைக்குள் சரண்’ – சசிகலாவின் கனவை உடைத்த தீர்ப்பு!

‘மாலைக்குள் சரண்’ – சசிகலாவின் கனவை உடைத்த தீர்ப்பு!

689
0
SHARE
Ad

sasikala-புதுடெல்லி – சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வெளியானது.

பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை நிலைநிறுத்திய உச்சநீதிமன்றம், சசிகலா உட்பட மூவரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் அறிவித்தது.

தீர்ப்பு தனக்கு சாதகமாக வரும், நாளையே தமிழக முதல்வராகப் பதவி ஏற்று விடலாம் என்று திட்டம் வைத்திருந்த சசிகலாவின் கனவை இந்தத் தீர்ப்பு சுக்கு நூறாக நொறுக்கியது.