Home Featured நாடு லிட்டில் இந்தியாவில் வடகொரியாவின் உளவு நிறுவனம் – யுஎன் அதிர்ச்சித் தகவல்!

லிட்டில் இந்தியாவில் வடகொரியாவின் உளவு நிறுவனம் – யுஎன் அதிர்ச்சித் தகவல்!

1398
0
SHARE
Ad

1343365012_littleindia-mainகோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்திருக்கும் லிட்டில் இந்தியா பகுதியில், வடகொரியாவின் உளவு நிறுவனம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது.

குளோகாம் (Glocom) என்ற பெயரில் செயல்படும் அந்நிறுவனம், வடகொரிய உளவாளிகளால் நடத்தப்பட்டு வருவதாகவும், ஐ.நா பொருளாதாரத் தடைகளை மீறி, போரில் பயன்படுத்தப்படும் ரேடியோ கருவிகளை விற்பனை செய்வதாகவும் ஐக்கிய நாடுகள் தனது பாதுகாப்புக் கவுன்சிலுக்கு எழுதிய அறிக்கையை ரைட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

மலேசியாவில் இணையதளம் வைத்திருக்கும் குளோகாம் நிறுவனம் “இராணுவம் மற்றும் துணை இராணுவத்திற்கு” தேவைப்படும் 30 ரேடியோ கருவிகளை விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தியிருப்பதையும் ரைட்டர்ஸ் கண்டறிந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு நிறுத்தப்பட்ட அந்த இணையதளத்தில், லிட்டில் இந்தியா முகவரி கொடுப்பட்டிருக்கிறது. எனினும் செய்தியாளர்கள் அங்கு சென்ற போது யாரும் இல்லை என்றும், அலுவலக அஞ்சல் பெட்டி எடுக்க ஆளின்றி கடிதங்களால் நிறைந்து காணப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

உண்மையில், மலேசியாவில் அப்படி ஒரு நிறுவனம் இல்லை என்றும், ஆனால் இரண்டு மலேசிய நிறுவனங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், வடகொரியப் பங்குதாரர்களும், இயக்குநர்களும், கடந்த 2009-ல் குளோகாமின் இணையதளத்தைப் பதிவு செய்திருப்பதாக அந்த இணையதளம் மற்றும் நிறுவனப் பதிவு ஆவணங்கள் கூறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.