Home Featured நாடு “சுல்தானுக்கு விளக்கக் கடிதம் அனுப்புவேன்” – சிவராசா

“சுல்தானுக்கு விளக்கக் கடிதம் அனுப்புவேன்” – சிவராசா

1140
0
SHARE
Ad

Sivarasa-FEATURE

கோலாலம்பூர் – சுபாங் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள ஒரு பள்ளி வாசலில் அரசியல் உரையாற்றியதற்காக சிலாங்கூர் சுல்தானின் அதிருப்தியைச் சந்தித்துள்ள பிகேஆர் கட்சியின் சுபாங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஆர்.சிவராசா, நடந்தவற்றை விளக்கி சிலாங்கூர் சுல்தானுக்கு கடிதம் ஒன்றை அனுப்பவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் ரஸ்லான் ஜலாலுடின் அவரது சட்டமன்றத் தொகுதியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு உதவி நிதி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றபோது அதில் நான் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சியில் என்னை உரையாற்றுமாறு நிகழ்ச்சி நடத்துநர் என்னை அழைத்தார். அவர் அழைத்த பின்னர் நான் பேச மாட்டேன் என ஒதுங்குவது நன்றாக இருக்காது என்பதால், நான் மேடையேறி உரையாற்றினேன்” என சிவராசா தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார்.