Home இந்தியா ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இன்று வெள்ளிக்கிழமை இரவு இணைகின்றனர்

ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இன்று வெள்ளிக்கிழமை இரவு இணைகின்றனர்

553
0
SHARE
Ad

panneer selvam-palanisamy-comboசென்னை – (மலேசிய நேரம் இரவு 11.45 நிலவரம்) பலரும் எதிர்பார்த்த திருப்பமாக – அதே வேளையில் பலர் எதிர்பார்க்காத திருப்பமாக – முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியினரும், நடப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினரும், சசிகலா-தினகரன் அணியினரை ஒதுக்கி வைத்து விட்டு, இன்று வெள்ளிக்கிழமை இரவே இணைகின்றனர் என்ற தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இதன் தொடர்பிலான ஆகக் கடைசியான தகவல்கள் பின்வருமாறு:-

  • ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் இந்திய நேரம் மாலை 5.00 மணிக்குத் தொடங்கிய அவரது அணியினரின் கூட்டம் சுமார் 4 மணி நேரம் நீடித்தது.
  • கூட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அனைவரும் வெளியேறத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
  • ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
  • அதேவேளையில் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திலும் அவரது அணியினரும் கூட்டமொன்றை நடத்தினர். அவர்களும் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
  • விரைவில் பன்னீர் செல்வம் அல்லது எடப்பாடி பழனிசாமி சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • பழனிசாமி, பன்னீர் செல்வம் இருவரும் இன்று வெள்ளிக்கிழமை இரவே ஜெயலலிதா நினைவிடத்திற்குச் செல்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அங்கே, அவர்கள் இருவரும் தங்கள் அணியினர் இணைவது குறித்து அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.