Home இந்தியா அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்!

அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்!

790
0
SHARE
Ad

புது டில்லி: பாகிஸ்தான் சிறைப்பிடித்து வைத்திருந்த இந்திய போர் விமானி அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை, மாலை 5:00 மணியளவில் (இந்திய நேரம்) விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக, அந்த விமானியை வரவேற்க இந்தியா முழுவதுமே பரபரப்பாகத் தயாராகி வந்தது. வாகாஅட்டாரி எல்லைப் பகுதியில் ஏராளமான மக்கள் கூடியிருந்து பட்டாசுகள் வெடித்து, ஆடிப்பாடிக் கொண்டாடினர்.

இந்தியாபாகிஸ்தான் இடையிலான வாகா-அட்டாரி எல்லைப் பகுதிக்கு அபிநந்தன் கொண்டு வரப்பட்டு, அதன் பின்னர் இராணுவ முறைப்படி அவர் பாகிஸ்தான் இராணுவத்தினரால், இந்திய வான்படை உயர் அதிகாரிகளின் வசம் ஒப்படைக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, அவர் அங்கிருந்து விமானத்தின் மூலம் டில்லிக்கு கொண்டுச் செல்லப்படுவார்.

இந்தியா முழுவதிலும் ஓரு சிறந்த வீரதீர விமானியாகவும், துணிச்சல் மிக்கவராகவும் அபிநந்தன் கொண்டாடப்படுகிறார். பாகிஸ்தான் சிறைப் பிடித்து வைத்திருந்த நிலையிலும், காயம்பட்டு, கண்கள் கட்டப்பட்டிருந்த இக்கட்டான சூழலிலும், பாகிஸ்தான் இராணுவத்தினர் கேட்ட சில கேள்விகளுக்கு அந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை எனத் துணிச்சலாக அவர் பதிலடி கொடுத்தது, இந்தியர்களைப் பெரிதும் கவர்ந்தது.