Home உலகம் பாகிஸ்தான்- ஈரான் பதிலடித் தாக்குதல்கள் தொடர்கின்றன

பாகிஸ்தான்- ஈரான் பதிலடித் தாக்குதல்கள் தொடர்கின்றன

524
0
SHARE
Ad

இஸ்லாமாபாத் : மத்திய கிழக்கில் மோசமடைந்து வரும் நாடுகளுக்கிடையிலான மோதல்களில் ஆகக் கடைசியாக இடம் பெறும் நாடுகள் ஈரானும் பாகிஸ்தானும்! செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 16) ஈரான் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியிலுள்ள தீவிரவாதக் குழுக்களைத் தாக்கும் நோக்கும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. டுரோன் என்னும் ஆளில்லான சிறுவிமானங்களைக் கொண்டும்  ஏவுகணைகளைக் கொண்டும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை (ஜனவரி 18) அதிகாலை பாகிஸ்தான் ஈரானுடனான எல்லையோரக் கிராமம் ஒன்றை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரானிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் மூத்த அதிகாரியை அழைத்து ஈரான் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.