Home One Line P2 நம்ம வீட்டுப்பிள்ளையாக அக்டோபரில் களம் இறங்கும் சிவகார்த்திகேயன்!

நம்ம வீட்டுப்பிள்ளையாக அக்டோபரில் களம் இறங்கும் சிவகார்த்திகேயன்!

1045
0
SHARE
Ad

சென்னை: இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து இரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். இப்படத்தில் நடிகர் கார்த்தி நடித்திருந்தார். குடும்பப்பாங்கான இப்படம் அனைவரின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அதே பாணியில் நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி பாத்திரத்தில் நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’. இப்படத்தில் பாரதிராஜா, சூரி, சமுத்திரக்கனி, யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல் ஆகியோர் பலர் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளனர். மீண்டும் ஒரு குடும்ப சூழலை மையப்படுத்தி இப்படம் உருவாகி இருக்கும் என்று இரசிகர்களால் நம்பப்படுகிறது.

வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு வரும் இப்படத்தின் முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியானது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்:

#TamilSchoolmychoice