Home Video விஜய் நடிக்கும் ‘கோட்’ படப் பாடல் : ‘பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா?’

விஜய் நடிக்கும் ‘கோட்’ படப் பாடல் : ‘பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா?’

695
0
SHARE
Ad

சென்னை : எதிர்வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகவிருக்கும் விஜய்யின் கோட் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று (ஏப்ரல் 14) புத்தாண்டு தினத்தில் வெளியிடப்பட்டது.

‘பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா?’ என்று தொடங்குகிறது அந்தப் பாடல். விஜய்யின் அரசியல் நுழைவைக் குறிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி. பாடலுக்கு இசையமைத்திருப்பவர் யுவன் சங்கர் ராஜா.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், (மைக்) மோகன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இன்றைய முதல் பாடல் வெளியான சுமார் 1 மணி நேரத்தில் 1.4 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் யூடியூப் தளத்தில் கண்டு ரசித்திருக்கின்றனர்.

அந்தப் பாடலின் காணொலியை கீழ்க்காணும் யூடியூப் தளத்தில் காணலாம்: