Home One Line P2 ஊழியர் சேமநிதி வாரியம் : முதலீடுகளால் 13.5 பில்லியன் ரிங்கிட் வருமானம்

ஊழியர் சேமநிதி வாரியம் : முதலீடுகளால் 13.5 பில்லியன் ரிங்கிட் வருமானம்

579
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டின் முக்கிய நிதிக் கழகங்களுள் ஒன்றாகத் திகழும் இபிஎப் எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியம் தனது நிதி இருப்பைக் கொண்டு செய்த முதலீடுகளின் மூலம் செப்டம்பர் 30, 2019 முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் 13.5 பில்லியன் ரிங்கிட் வருமானத்தைப் பெற்றிருக்கிறது.

எனினும் கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தோடு ஒப்பிடும்போது இது 7.6 விழுக்காடு குறைவானதாகும்.

இந்த வீழ்ச்சிக்குக் காரணம் நிலைத்தன்மையற்ற, கொந்தளிப்பான பங்குச் சந்தைகள்தான் காரணம் என்றும் ஊழியர் சேமநிதி வாரியம் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

அமெரிக்கா-சீனா இடையிலான வணிகப் போர், ஹாங்காங் போராட்டங்களால் பலவீனமடைந்த அந்நாட்டு பங்குச் சந்தை, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளின் பங்குச் சந்தைகள் தங்களின் உண்மையான சக்திக்கு ஏற்ப இயங்காதது, போன்ற பல காரணங்களால் ஊழியர் சேமநிதி வாரியத்தின் முதலீடுகள் எதிர்பார்த்த வருமானத்தைப் பெற்றுத் தரவில்லை என்றும் சேமநிதி வாரியத்தின் அறிக்கை தெரிவித்தது.