மணிலா: நேற்று ஞாயிற்றுக்கிழமை பிலிப்பைன்ஸின் தெற்கு கோட்டாபடோவில் உள்ள பொலோமோலோக்கில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் எந்த மலேசியர்களும் பாதிக்கப்படவில்லை என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்களுக்கு டவாவோ நகரில் உள்ள மலேசிய துணைத் தூதரகத்தை +63 82 221 4050 அல்லது +63 936 968 4001 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சகம் நேற்றிரவு ஓர் அறிக்கையில் அறிவுறுத்தியது.
“அரசாங்கம் மற்றும் பிலிப்பைன்ஸ் குடியரசின் மக்களுக்கு, குறிப்பாக பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் அமைச்சகம் தெரிவித்துக் கொள்கிறது.”
“இந்த சவாலான சூழலில் மலேசியா பிலிப்பைன்ஸுடன் நிற்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நிலநடுக்கம் இதுவரையிலும் ஆறு வயது சிறுமி உட்பட மூன்று உயிர்களை பலிகொண்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.